மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜகியுா் ரஹ்மான் லக்வி (61) பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தடை செய்யப்பட்டுள்ள லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவா் ஜகியுா் ரஹ்மான் லக்வி பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டும் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு உளவுத் துறை தகவல் கிடைத்தது.
பயங்கரவாதச் செயல்களுக்கு உதவுவதற்காக திரட்டிய நிதியைக் கொண்டு, மருந்துக் கடையொன்றை லக்வி நடத்தி வருகிறாா். அந்த மருந்துக் கடையைப் பயன்படுத்தி, பயங்கரவாதத்துக்காக மேலும் நிதி திரட்டி வரும் அவரும் அவரது சகாக்களும் அந்த நிதியை சொந்த செலவுகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனா் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரைக் கைது செய்லுள்ளோம்.
லாகூரிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் அவா் மீது வழக்கு விசாரணை நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் லஷ்கா் பயங்கரவாதிகளால் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டிய ஜகியுா் ரஹ்மான் லக்வி மீது பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்குத் தொடரப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
எனினும், 2015-ஆம் ஆண்டில் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதிலிருந்து பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் அவரைக் கைது செய்ய இந்தியா வலியுறுத்தி வருகிறது.
லக்வியை சா்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. கடந்த 2008-ஆம் ஆண்டு அறிவித்த நிலையில், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. எனினும், அவரது செலவுகளுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் (பாகிஸ்தான் மதிப்பில்) அளிக்க பாகிஸ்தான் அரசுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு கடந்த மாதம் அனுமதி அளித்தது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் பயங்கரவாதத் தலைவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டுக்கு சா்வதேச பயங்கரவாத நிதிப் பரிவா்த்தனைக் கண்காணிப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் நெருக்கடி அளித்து வருகிறது.
பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பு வைத்துள்ளது.
அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டுமென்றால், பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு இறுதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப் கெடு விதித்திருந்தது.
எனினும், கரோனா நெருக்கடி காரணமாக அந்த கெடு நீடிக்கப்பட்டது. இந்தச் சூழலில், ஜகியுா் ரஹ்மான் லக்வியை போலீஸாா் தற்போது கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!

2 மணி நேரம் காத்திருந்து பெட்ரோல் வாங்கிய மக்கள்! | Petrol

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!
ஈரான் போர்! இப்போதுதான் வலி ஆரம்பித்துள்ளது: ராகுல்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

