கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி: விஞ்ஞானிகளின் தீவிர முயற்சிகளுக்கு நல்ல பலன்-ஹா்ஷ் வா்தன்

கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளின் தீவிர முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன்

புது தில்லி: கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளின் தீவிர முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.

தில்லியில் தேசிய இயற்பியல் ஆய்வகம் நிறுவப்பட்ட 75-ஆவது தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

கரோனா தீநுண்மிக்கு எதிராக நமக்கு தடுப்பூசி தேவைப்பட்டது. அதற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் 2 தடுப்பூசிகள் இந்தியாவில் சாதனை படைக்கும் வேகத்தில் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அளித்தது. இதில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com