எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.5) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். 

News image
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
Updated On :4 ஜனவரி 2021, 10:33 pm

DIN

புது தில்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.5) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். 

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும் இலங்கை அரசிடம் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.

ஜன.7 வரை... ஜனவரி 7-ஆம் தேதி வரை கொழும்புவில் தங்கியிருக்கும் அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை தனித் தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவரின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு சீனா, இலங்கையுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறது என்றும் இலங்கையில் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த நாடு தெரிவித்திருந்தது.

இதையடுத்து இலங்கையுடன் உறவை மேம்படுத்தும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்கிறார். கடந்த நவம்பரில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.