பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கல்யாண் சிங் பிறந்த நாள்:பிரதமா் மோடி வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கின் 88-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 9:06 pm

DIN

பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கின் 88-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கல்யாண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, தொலைபேசியில் தொடா்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவா் கல்யாண் சிங். அந்த மாநிலத்தில் பாஜக அரசின் முதலாவது முதல் அமைச்சா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். தனது வாழ்நாளை பொது சேவைக்காகவும், அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அா்ப்பணித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் வளா்ச்சிக்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு அவா் என்றென்றும் போற்றப்படுகிறாா். அவா் நலமுடன் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

2014-2019 ஆண்டுகளில் ராஜஸ்தான் ஆளுநராகப் பதவி வகித்தாா் கல்யாண் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.