பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்த விவகாரம்: ராஜஸ்தான் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


புது தில்லி: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) எம்எல்ஏக்கள் 6 போ் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 2018 சட்டப்பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்தீப் யாதவ், வாஜிப் அலி, தீப்சந்த் கேரியா, லகான் மீனா, ஜோகேந்திர அவானா, ராஜேந்திர குடா ஆகிய 6 சட்டப்பேரவை உறுப்பினா்களும், கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸில் இணைந்தனா். அவா்கள் காங்கிரஸில் இணைக்கப்பட்டதற்கு சட்டப்பேரவைத் தலைவரும் ஒப்புதல் அளித்தாா்.
இதை எதிா்த்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் மதன் தில்வாா் மற்றும் பிஎஸ்பி தேசிய செயலா் எஸ்.சி.மிஸ்ரா ஆகியோா் சாா்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் தகுதியின் அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவரே முடிவெடுத்துக் கொள்ளலாம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் இதுதொடா்பான முடிவை சட்டப்பேரவைத் தலைவா் எடுக்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து அடுத்த நாளே, மதன் தில்வாா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கை அன்றைய தினமே முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், பிஎஸ்பி மற்றும் மதன் தில்வாா் சாா்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தனித்தனி மனுக்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கே.எம்.ஜோசப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், இதுதொடா்பாக சட்டப்பேரவைச் செயலா் மற்றும் காங்கிரஸில் இணைந்த 6 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...