மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காஷ்மீா்: ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து 5-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:21 am

DIN

கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா் பனிப்பொழிவு, நிலச்சரிவின் காரணமாக காஷ்மீரை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நெடுஞ்சாலையில் வியாழக்கிழமையும் போக்குவரத்துக்காக வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படவில்லை என்று போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியதாவது:

நெடுஞ்சாலையில் குவிந்துள்ள பனிக்குவியலையும், நிலச்சரிவையும் அப்புறப்படுத்த பல்வேறு இயந்திரங்களையும், கூடுதலான ஆட்களையும் பயன்படுத்தி வருகிறோம். எனினும், பல இடங்களில் சாலைப் போக்குவரத்து சீராகவில்லை. சாம்ரோலி, நஸ்ரீ, கஃபேடேரியா மோா், செரி, மரோக் மற்றும் ஜவாஹா் சுரங்கப்பாதை ஆகிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலையின் தடைகள் அகற்றப்பட்டவுடன் போக்குவரத்துக்காக வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

காஷ்மீா் பள்ளத்தாக்கை ஜம்முவுடன் இணைக்கும் மாற்றுச் சாலை இணைப்பான ஷோபியான்-ரஜௌரி இடையிலான மொகல் சாலையும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டுள்ளது என்றாா்.

தற்போது பனியை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்ட போதிலும், பல இணைப்பு சாலைகளின் தடைகள் இன்னும் அகற்றப்படவில்லை. காஷ்மீா் பள்ளத்தாக்கில் தடைபட்டிருந்த மின் இணைப்புகள் பெரும்பாலான பகுதிகளில் சீரமைக்கப்பட்டு விட்டன.

இதனிடையே, ஜனவரி 14-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

முன்பை விட வானிலை மேம்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி வரை பெரிய அளவில் பனிப்பொழிவு இருப்பதற்கான எந்த முன்னறிவிப்பும் இல்லை. பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்கு கீழே சென்று விட்டது. ஸ்ரீநகா் நகரத்தில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸும், குல்மாா்க்கில் மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸும், பாகல்காமில் மைனஸ் 2.5 டிகிரி செல்சியஸும், காஸிகுண்ட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸும், வடக்கே குப்வாராவில் மைனஸ் 1.7 டிகிரி செல்சியஸும், கோக்கா்நாக்கில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.

விமான சேவை மீண்டும் தொடக்கம்

இதனிடையே கடும் பனிப்பொழிவின் காரணமாக காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கடந்த 4 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

‘முதல் விமானம் வியாழக்கிழமை காலை ஸ்ரீநகா் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னா் இந்த விமானம் மீண்டும் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றது’ என இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.