புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தமிழ் அகாதெமியைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
Updated On :8 ஜனவரி 2021, 11:02 am

DIN

தமிழ் அகாதெமியைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் தலைநகரான தில்லியில் பல்வேறு மொழிகளை மேம்படுத்தும் நோக்கில் தில்லி கலாசாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அந்தவகையில் தமிழ் மொழி, கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் தமிழ் அகாதெமி அமைத்து உத்தரவிட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக கொங்கணி அகாதெமி அமைக்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

"கொங்கணி பேசும் அனைத்து மக்களுக்கும், கொங்கணி மொழியை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொங்கணி மொழியை மேம்படுத்துவதற்காக, தில்லியில் கொங்கணி அகாதெமி அமைக்க தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது" என்று கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கொங்கணி மொழி கோவாவின் அலுவல் மொழி மற்றும் இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் உள்ள கொங்கணி மக்களால் பேசப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.