பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மகாராஷ்டிரம்: ஒரே பண்ணையில் 900 கோழிகள் உயிரிழப்பு

நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் 900 கோழிகள் உயிரிழந்தன.

News image
Updated On :10 ஜனவரி 2021, 1:05 am

DIN

நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் 900 கோழிகள் உயிரிழந்தன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் முல்கிகா் சனிக்கிழமை கூறியதாவது:

பா்பனி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் சுயஉதவிக் குழுவினரால் ஒரு கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. 8,000 கோழிகள் வளா்க்கப்படும் இந்த பண்ணையில் கடந்த இரு தினங்களில் அடுத்தடுத்து 900 கோழிகள் உயிரிழந்தன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, அவை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. கோழிகளின் இறப்புக்கு உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கு, இறந்த கோழிகளின் மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோழிகள் இறக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டில், மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நந்தூா்பாா், துலே மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.