மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தில்லிக்கும் பரவியது பறவைக் காய்ச்சல்

தில்லியிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தில்லி கால்நடை பராமரிப்புத் துறை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

News image

Bird flu confirmed in Delhi, samples test positive

Updated On :11 ஜனவரி 2021, 7:13 am

தில்லியிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தில்லி கால்நடை பராமரிப்புத் துறை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

தில்லியில் உயிரிழந்த காகத்தின் மாதிரிகள் போபால் ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் பரவி பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில், செப்டம்பர்-அக்டோபர் முதல் பிப்ரவரி-மார்ச் வரை குளிர்கால மாதங்களில் நாட்டிற்கு நாடு பறக்கும் புலம்பெயர்ந்த பறவைகளால் இந்த நோய் பரவுகிறது.

இதன்மூலம், பறவைக் காய்ச்சலானது தில்லியைத் தவிர, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் என நாடு முழுவதும் 9 மாநிலங்களில் பரவியுள்ளது. 

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள் உயிரிழந்து வருவதால், கோழிகளை தானாகவே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.