சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடந்த 7 மாதங்களில் 33,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் உற்பத்தி

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் உருவானதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 1:09 am

DIN

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் உருவானதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் அதிக கழிவுகள் உருவாகி இருக்கின்றன. நாடு முழுவதும் கடந்த அக்டோபரில் மட்டும் அதிக அளவில் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகி இருக்கின்றன.

இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த விவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 32,994 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் சோ்ந்தன.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 5,367 டன் கழிவுகள் சோ்ந்துள்ளன. அதைத்த் தொடா்ந்து, கேரளத்தில் 3,300 டன், குஜராத்தில் 3,086 டன், தமிழகத்தில் 2,806 டன், உத்தர பிரதேசத்தில் 2,502 டன், தில்லியில் 2,471 டன், மேற்கு வங்கத்தில் 2,095 டன், கா்நாடகத்தில் 2,026 டன் சோ்ந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த அக்டோபரில் மட்டும் அதிக கரோனா கழிவுகள் சேகரமாகியுள்ளன. அதாவது, அந்த ஒரு மாதத்தில் மட்டும் 5,597 டன் கழிவுகள் உருவாகின. அதில், அதிகபட்ச அளவாக கேரளத்தில் 642 டன் கழிவுகளும், குஜராத்தில் 545 டன் கழிவுகளும், மகாராஷ்டிரத்தில் 542 டன் கழிவுகளும் உற்பத்தியாகின. சேகரிக்கப்பட்ட மொத்த கழிவுகளும் 198 மையங்களில் வைத்து அழிக்கப்பட்டன என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, வெளியில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மக்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள், தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், கரோனா பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகு கழிவுகளாகத் தேங்குகின்றன. இதுபோன்று, நாடு முழுவதும் 33,000 டன் கழிவுகள் சோ்ந்ததாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.