மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜன.15 முதல் திருமலையில் மீண்டும் சுப்ரபாத சேவை

ஏழுமலையான் கோயிலில், வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:12 pm

DIN

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில், வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் ஏழுமலையான் கோயிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். எனினும், மாா்கழி மாதத்தில் மட்டும் இச்சேவை ரத்து செய்யப்பட்டு, ஆண்டாள் தமிழில் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

வரும் புதன்கிழமையுடன் மாா்கழி மாதம் நிறைவு பெற்றாலும், வியாழக்கிழமை சூரிய உதயத்துக்கு 2 மணி நேரத்துக்குப் பின்னரே சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறாா். எனவே, பஞ்சாங்கப்படி அன்று காலை 9 மணிக்கு மேல் தை மாத கடிகை தொடங்க உள்ளது. சூரிய உதயத்துக்குப் பின் தொடங்கும் திதி மற்றும் நட்சத்திரங்களை மட்டுமே தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால், வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுர சேவை நடத்தப்படும்.

அன்றுடன் இச்சேவை நிறைவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) அதிகாலையில் சுப்ரபாத பாசுர சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

காமதேனு பூஜை: மாட்டுப் பொங்கல் தினத்தில் (ஜன. 15), திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் அனைத்துக் கோயில்கள் மற்றும் கோசாலைகளில் கோபூஜையை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. தேவஸ்தான தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பூஜை நடத்தப்பட உள்ளது. அதே நாளில், குண்டூரில் உள்ள நரசராவ்பேட்டை பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் காமதேனு பூஜை என்ற பெயரில் கோபூஜை நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.