கரோனா முடிவின் ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளோம்: எய்ம்ஸ் இயக்குநர்

கரோனா பெருந்தொற்று முடிவின் ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா (கோப்புப்படம்)
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா (கோப்புப்படம்)

கரோனா பெருந்தொற்று முடிவின் ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தில்லி கரோனா தடுப்பூசி மையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், ''மிகப்பெரிய அளவிலான கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த திட்டம் சுமூகமாக முழுமையடையும் என்றும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க இயலும் என்ற நம்பிக்கை உள்ளது. கரோனா பெருந்தொற்று முடிவின் ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளோம்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com