தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜஸ்தான்: பேருந்து தீ விபத்தில் 6 பேர் பலி; 17 பேர் படுகாயம்

ராஜஸ்தானில் பேருந்து தீப் பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

ராஜஸ்தானில் பேருந்து தீப் பிடித்து விபத்து: 6 பேர் பலி; 17 பேர் படுகாயம்

Updated On :17 ஜனவரி 2021, 11:04 am

DIN


ராஜஸ்தானில் மின்கம்பத்தில் பேருந்து மோதி தீ பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் மஹேஷ்பூர் பகுதியில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக மாவட்ட ஆட்சியர் லால் கோயல் தெரிவித்துள்ளார்.

விபத்து நடத்த சம்பவ இடத்திலேயே ஓட்டுநரும், நடத்துநரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் வந்த பயணிகள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர். அதில் 7 பேர் தீவிர சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.