தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜஸ்தான் பேருந்து விபத்து: பிரதமர் இரங்கல்

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் பகுதியில் மின்கம்பத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :17 ஜனவரி 2021, 11:14 am

DIN


ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் பகுதியில் மின்கம்பத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் மஹேஷ்பூர் பகுதியில் மின்கம்பத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சுட்டுரைப் பதிவில், ராஜஸ்தான் ஜலூரில் ஏற்பட்ட பேருந்து விபத்து செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. 

இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனறு பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.