சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதோபூா் அருகே உள்ள தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக் குமாா் (58) என்பவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆக.19 இரவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் ஒன்று அசோக் குமாா், அவரது தாய் சத்யாதேவி, மனைவி ஆஷாதேவி, மகன்கள் அபின், கௌஷல் ஆகியோரைத் தாக்கியதில் அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த சஜன் அமீர் என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...