ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு மேற்குவங்க ஆளுநர் ரூ. 5 லட்சம் நன்கொடை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 
மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர்
மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து கோயில் கட்டுமானப் பணிக்கான நிதியானது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை நிதி அளித்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி இணைந்து ரூ. 5 லட்சத்து ஒரு ரூபாய்(ரூ. 5,00,001) நன்கொடை அளித்துள்ளனர். இதற்கான காசோலை வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ராஜ் பவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஆளுநரின் அழைப்பிற்கு ஏற்ப, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய செயற்குழு தலைவர் அலோக் குமார் இன்று காலை தில்லியிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்று ஆளுநரை நேரில் சந்தித்து காசோலையை பெற்றுக்கொண்டார். அவருடன் உறுப்பினர்களும் சென்றனர். 

இதுகுறித்து ராஜ் பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான உச்சநீதிமன்றத்தின் ஏகமனதான தீர்ப்பைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப்பணி நடக்கிறது. நமது பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் நாகரிகத்தின் செழுமையைப் போற்றுகிறேன். தொகையைவிட நன்கொடை அளிப்பதன் நோக்கம் மிகவும் முக்கியமானது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com