சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான காங்கிரஸ் தீர்மானம் நிராகரிப்பு

கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

News image
கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான காங்கிரஸ் தீர்மானம் நிராகரிப்பு
Updated On :21 ஜனவரி 2021, 10:22 am

DIN

கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்றைய (ஜன.21) பேரவைக் கூட்டத்தின் போது கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீர்மானம் முன்மொழிந்துள்ளது. தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் கோரினர். 

எனினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்மொழிந்த இந்தத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாது என்று இடது முன்னணி அரசு தெரிவித்தது. இதனால் சற்று நேரம் பேரவையில் அமளி நிலவியது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் சட்டப்பேரவை புனரமைப்புக்காக விடப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகார்களை சபைத்தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் மறுத்திருந்தார்.

அரசியல் விவகாரங்களில் அரசை குற்றம்சாட்ட முடியாததால் எதிர்க்கட்சிகள் தன்னை குறிவைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிரான தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை நிராகரித்தது.  இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சபை வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.