ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜன. 30-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஜனவரி 30-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகை புரியவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)
Updated On :21 ஜனவரி 2021, 1:07 pm

DIN


பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஜனவரி 30-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகை புரியவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்கவும் ஜெ.பி.நட்டா திட்டமிட்டுள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி தமிழகம் வந்த ஜெ.பி.நட்டா சென்னையை அடுத்த மதுரவாயலில் நடைபெற்ற பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெ.பி.நட்டா தற்போது  தமிழகம் வருகை புரியவுள்ளார். தமிழகத்தில் அவர் மதுரைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வருகிற 28-ஆம் தேதி ஜெ.பி.நட்டா புதுச்சேரி வரவிருப்பதாகவும் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.