பொதுமுடக்கம் எதிரொலி: 2020-இல் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு
2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் கடந்த 2020-இல் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


டோக்யோ: 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் கடந்த 2020-இல் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளே, தற்கொலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு மட்டும் ஜப்பானில் 20,919 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 750 அல்லது 3.7 சதவீதம் அதிகமாகும்.
2009-ஆம் ஆண்டு முதலே ஜப்பானில் தற்கொலைகள் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2020-இல் 13,943 ஆண்களும், 6,976 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில்லாமல், ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 பள்ளிச் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கரோனா பொதுமுடக்கத்தால் தங்களது வாழ்க்கை முறை, பொருளாதார காரணிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை நம்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...