தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கேரளம்: பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் காங். ஆலோசனை

கேரளத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News image
மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா (கோப்புப்படம்)
Updated On :17 பிப்ரவரி 2021, 12:45 pm

DIN


கேரள சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கேரளத்தில் இந்த ஆண்டு மே மாதத்துடன் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி காலம் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து கேரளத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்திகள் குறித்து நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வரா திருவனந்தபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக வலிமையுடன் நாங்கள் ஆட்சியமைப்போம். தேர்தல் யுக்திகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதன்படி செயல்படவுள்ளோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.