தைராய்டு சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்து

தைராய்டு சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்து

ஜயோடின் குறைபாட்டால் தைராய்டு சுரப்பி ஏற்படுகிறது. ஒருசிலருக்கு இது அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் சுரக்கின்றது. 
Published on


ஜயோடின் குறைபாட்டால் தைராய்டு சுரப்பி ஏற்படுகிறது. ஒருசிலருக்கு இது அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் சுரக்கின்றது. கீழ் கொடுக்கப்பட்டுள்ள சூரணத்தைப் பயன்படுத்திவர தைராய்டு சார்ந்த குறைபாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். 

தேவையான பொருள்கள்

சுண்டைக்காய் வற்றல்    -  200 கிராம்

சோம்பு                  -   200 கிராம்

சீரகம்                    -   200 கிராம்

செய்முறை

முதலில் சுண்டைக்காய் வற்றலை மேற்கூறிய அளவு எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். சோம்பு மற்றும் சீரகத்தை எடுத்துச் சுத்தப்படுத்தி ஒரு பாத்திரத்தில் வெறுமனே போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு  மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் தைராய்டு சார்ந்த குறைபாடுகளால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தை தயார் செய்து தினமும் அதிகாலை வேளை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பாட்டிற்குப் பின்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com