‘காவல்துறை வன்முறையைத் தூண்டியது’: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு
தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் அரசு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளனர்.


தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் அரசு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங், “காசிப்பூர் எல்லையில் அனுமதிக்கப்பட்ட பாதையில் பேரணி செல்ல விவசாயிகளை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும் விவசாயிகளைக் கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இது வன்முறைக்கு வித்திட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “வன்முறையில் ஈடுபட்ட 15 பேரை காவல்துறையினரிடம் விவசாயிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடமிருந்து அரசு ஊழியருக்கான அடையாள அட்டைகள் இருப்பது கைப்பற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...