வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஹரியாணா எம்.எல்.ஏ. ராஜிநாமா
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியாணா மாநிலத்தின் தேசிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அபய்சிங் செளதலா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியாணா மாநிலத்தின் தேசிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அபய்சிங் செளதலா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 63 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தின் எல்லெனாபாத் சட்டமன்ற உறுப்பினரான அபய்சிங் செளதலா தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து செளதலா தனது ராஜிநாமா கடிதத்தை ஹரியாணா சட்டப்பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தாவிடம் வழங்கினார்.
அவரது கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...