சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தேக்கடியில் படகு சவாரி கட்டண உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

தேக்கடியில்  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரிக்கு  கட்டணத்தை அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்லாமல் திரும்புகின்றனர்.  

News image
தேக்கடியில் படகு சவாரி.
Updated On :29 ஜனவரி 2021, 1:18 pm

DIN

தேக்கடியில்  உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரிக்கு  கட்டணத்தை அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்லாமல் திரும்புகின்றனர்.  

கரோனா தொற்றால் இடுக்கி மாவட்டத்தில் பலமாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட சுற்றுலா திட்டங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. இதையடுத்து தேக்கடி வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ஆனால் அதே நேரம் கேரள வனத்துறையும், கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் தேக்கடி படகுச்சவாரிக்கு 255 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணத்தை ரூபாய் 385 ஆகவும், நுழைவுக் கட்டணத்தை ரூபாய் 40 லிருந்து ரூபாய் 70 ஆகவும் உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு மட்டும் சுமார் ரூ 500 செலவிட வேண்டி உள்ளது. 

கரோனா தொற்றால் பாதிப்படைந்த தேக்கடியில் சுற்றுலா தொழில் செய்யும் சிறிய தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் முதல் தனியார் துறையில் உள்ள பெரிய ரிசார்ட்ஸ் வரை பெரும் கட்டண சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், கேரள வனத்துறையும், கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் படகு கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படகுச்சவாரி செல்லாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரும்புகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.