சுல்தான்பூர்: காதலியின் தந்தையை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், குற்றவாளியான ஜிதேந்திர குமாருக்கு (20) உதவி செய்த நண்பர் ரவி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23-ஆம் தேதி அமேதியைச் சேர்ந்த ஜிதேந்திரனை கடத்தியிருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அவரது தந்தைக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரவிதான், ஜிதேந்திர குமாரின் செல்லிடப்பேசியிலிருந்து பெற்றோரை தொடர்பு கொணடு பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
விசாரணை குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஜிதேந்திரனின் செல்லிடப்பேசியில் புதிய சிம் பொறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு அதே செல்லிடப்பேசியிலிருந்து புதிய எண்ணில் அழைப்பு வந்துள்ளது. எனவே, இதில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்ததும், அந்த சிம் எண் யார் பெயரில் இருக்கிறது என்று பார்த்த போது, அது ஜிதேந்திரனின் நண்பர் ரவி பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் காதலியின் தந்தையை காவல்துறையிடம் மாட்டிவிடும் எண்ணத்தில் இந்த கடத்தல் நாடகத்தை ஆடியதாக ஒப்புக் கொண்டுள்ளார் ஜிதேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


