ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

குறு விடியோ, நேரலை விடியோ: சோதனை முயற்சியில் யூடியூப்

பயனாளர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவு செய்யும் மிகக் குறுகிய விடியோக்களையும், நேரலை விடியோக்களையும் பதிவேற்றம் செய்யும் வசதிகளை யூடியூப் சோதனை முறையில் முயற்சித்து வருகிறது.

News image

குறு விடியோக்கள், நேரலை விடியோக்கள்: சோதனை முயற்சியில் யூடியூப்

Updated On :29 ஜனவரி 2021, 8:47 am


சான் பிரான்ஸிஸ்கோ: பயனாளர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவு செய்யும் மிகக் குறுகிய விடியோக்களையும், நேரலை விடியோக்களையும் பதிவேற்றம் செய்யும் வசதிகளை யூடியூப் சோதனை முறையில் முயற்சித்து வருகிறது.

இந்த குறு விடியோ என்பது 5 வினாடிகள் முதல் 60 வினாடிகள் நீளம் கொண்டதாக இருக்கும் வகையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒருவர் தனது மிகக் குறுகிய விடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, அதனை ஏராளமானோர் பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அந்த விடியோவை பதிவேற்றம் செய்து, அதனை மற்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

அதே நிலையில், ஒருவர் தான் பதிவேற்றம் செய்யும் விடியோவின் அளவையும் மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது இந்த விடியோவுடன் பதிவான ஆடியோ மட்டுமே ஒலிக்கும், எதிர்காலத்தில், ஆடியோவை இணைக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.