ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

Updated On :30 ஜனவரி 2021, 7:41 am


கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், இரண்டு மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் நான்கு பேர் மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரோனா மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் 3 மருத்துவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சாம்ராஜ்நகர் சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே, கரோனா வைரஸிலிருந்து காக்க உதவாது, இரண்டாவது டோஸ் மருந்தும் செலுத்திக் கொண்டால்தான், கரோனா தொற்றிலிருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு, இவர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.