காந்தி நினைவுநாள்: உண்ணாவிரதமிருந்து போராடும் விவசாயிகள்
தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் அகிம்சை வழியில் போராடிய காந்தி நினைவுநாளையொட்டி உண்ணாவிரதமிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் அகிம்சை வழியில் போராடிய காந்தி நினைவுநாளையொட்டி உண்ணாவிரதமிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி நினைவு நாளையொட்டி ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
தங்களுக்கு நாடு முழுவதுமுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 66 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தில்லி-ஹரியாணா எல்லையான சிங்கு, திக்ரி பகுதியிலும், தில்லி-உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தில்லி காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் அதிக அளவிலான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சிங்கு எல்லையில் நேற்று விவசாயிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கலைக்க விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்திய நிலையில், விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...