மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புகிறார் சசிகலா
பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா நாளை வீட்டிற்கு அனுப்பப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா நாளை வீட்டிற்கு அனுப்பப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை மருத்துவமனையிலிருந்து திரும்பும் அவர் பிப்ரவரி 3 அல்லது 5-ம் தேதி தமிழகத்திற்கு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு - பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை வழங்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து சசிகலா நாளை (ஜன. 31) விடுதலை செய்யப்படுவார் என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...