கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

கேரளத்தில் புதிதாக 5,266 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 5,266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2021, 1:32 pm


கேரளத்தில் புதிதாக 5,266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மாநிலத்தில் இன்று 5,266 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 4,746 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 71 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 48,118 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.94 சதவிகிதமாக உள்ளது. 

இதுவரை மொத்தம் 21 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,743 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5,730 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,54,206 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 70,983 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.