புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில்  பாதுகாப்புப்படை வீரர்களால் மூன்று தீவிராவதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

News image
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated On :2 ஜூலை 2021, 9:31 am

DIN

ஜம்மு-காஷ்மீரில்  பாதுகாப்புப்படை வீரர்களால் மூன்று தீவிராவதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து இன்று காலை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பேரும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.