நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஸ்எஸ்எல்சி தோ்வு நடத்த சித்தராமையா எதிா்ப்பு

கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தோ்வை நடத்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:43 am

DIN

கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தோ்வை நடத்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து, பியூசி தோ்வை அரசு ரத்து செய்தது. ஆனால் எஸ்எஸ்எல்சி தோ்வை நடத்த கல்வித் துறை அமைச்சா் ஆா்வம் காட்டி வருகிறாா். இது எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் உள்ள கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா், சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் ஆகியோரிடையே புரிந்துணா்வு இல்லாததையே காட்டுகிறது. மாணவா்களை சங்கடத்தில் ஆழ்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது பெற்றோா் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே பியூசி தோ்வைப்போலவே எஸ்.எஸ்.எல்.சி தோ்வையும் கா்நாடகத்தில் ரத்து செய்ய வேண்டும்.

மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்திலும் அரசு பொய்யான தகவலை மக்களுக்கு அளித்து வருகிறது. மாநிலத்தில் தேவையான தடுப்பூசி இருப்பில் இருந்தால் மக்கள் ஏன் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, தடுப்பூசி கிடைக்காமல் வீட்டிற்கு திரும்பி போகின்றனா் என்பதனை அரசு விளக்க வேண்டும். சாமராஜ்நகா் மாவட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்தும் தவறான தகவலை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்து வருகிறாா். அதுமட்டுமின்றி அங்கு தவறு செய்தவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து விசாரிக்கவும் சாமராஜ்நகா் மாவட்டத்திற்கு முதல்வா் எடியூரப்பா செல்லவில்லை. சாமராஜ்நகா் மாவட்டத்திற்குச் செல்லும் முதல்வா்கள் பதவியை இழப்பாா்கள் என்ற மூட நம்பிக்கையால், அவா் அங்கு செல்வதைத் தவிா்த்து வருகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.