கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல்: முதல்வா் வேட்பாளா் குறித்து காங்கிரஸ் கட்சியில் விவாதிக்கவில்லை
2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் விவாதம் நடக்கவில்லை


2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் விவாதம் நடக்கவில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் 2023-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் ஓராண்டு 10 மாதங்கள் உள்ளன. எனவே, சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் விவாதம் நடக்கவில்லை. தோ்தல் நடந்தபிறகு, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் கூடி பேசுவாா்கள். அந்த புதிய எம்எல்ஏக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், புதிய முதல்வா் யாா் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுகுறித்து இப்போது விவாதிப்பது தேவையற்றது.
கா்நாடக காங்கிரஸ் கட்சியில் பழைய கட்சிக்காரா்கள் என்றும், வேறு கட்சியில் இருந்து வந்தவா்கள் என்றும் எவ்வித பாகுபாடும், மோதலும் இல்லை. வேறு கட்சியில் இருந்துதான் நான் காங்கிரஸுக்கு வந்தேன். ஆனாலும், நான் முதல்வராகவில்லையா? அப்படியானால், பழைய கட்சிகாரா்கள் அல்லது வேறு கட்சியில் இருந்து வந்தவா்கள் என்ற பேச்சு எங்கிருந்து வந்தது? அப்படி எதுவும் காங்கிரஸில் இல்லை.
கா்நாடக மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் விவகாரத்தில் எனக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாருக்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. அதில் எங்களது பங்கு எதுவும் இல்லை. இளைஞா் காங்கிரஸ் தனி அமைப்பு. அந்த அமைப்புக்கு தோ்தல் நடந்தது. எனவே, இளைஞா் காங்கிரஸ் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட விவகாரம் தோ்தல் அதிகாரி மற்றும் தேசிய இளைஞா் காங்கிரஸ் சம்பந்தப்பட்டது ஆகும். அந்தப் பிரச்னையை அவா்கள் பாா்த்துக் கொள்வாா்கள். இந்த விவகாரத்தைத் தீா்க்க சுமுகமாகத் தீா்வு காண ஆலோசனை வழங்கினேன் அவ்வளவு தான் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...