மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆணவத்துக்கு தடுப்பூசி இல்லை: ராகுல் காந்திக்கு ஹர்ஷ் வர்தன் பதில்

ஆணவத்துக்கும், அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

News image
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
Updated On :2 ஜூலை 2021, 9:53 am

DIN


புதுதில்லி: தடுப்பூசி தொடர்பாக நேற்று  நான் வெளியிட்டுள்ள தகவல்களை ராகுல் பார்க்கவில்லையா, ஆணவத்துக்கும், அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ஜூலை வந்துவிட்டது, ஆனால் தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். 

Story image

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி குறித்த தகவல்களை நேற்று நான் வெளியிட்டுள்ளேன். இப்போது ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை.

அவர் அந்த தரவுகளை படிக்கவில்லையா? அவருக்கு புரியவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று ஹர்ஷ் வர்தன் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.