எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

'அற்பமான அரசியல் வேண்டாம்' - ராகுல் காந்திக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

கரோனா காலத்தில் கீழ்த்தரமான அரசியல் வேண்டாம் என ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாடியுள்ளார். 

News image
Updated On :2 ஜூலை 2021, 10:08 am

DIN

கரோனா காலத்தில் அற்பமான அரசியல் வேண்டாம் என ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாடியுள்ளார். 

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் தற்போது 34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. 

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை மாதம் வந்துவிட்டது, கரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார். 

जुलाई आ गया है, वैक्सीन नहीं आयीं।#WhereAreVaccines

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,  ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் நேற்றுதான் வெளியிட்டேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை? அவர் அந்த செய்தியை பிடிக்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார். 

Just yesterday, I put out facts on vaccine availability for the month of July.

What is @RahulGandhi Ji’s problem ?Does he not read ?
Does he not understand ?

There is no vaccine for the virus of arrogance and ignorance !!@INCIndia must think of a leadership overhaul ! https://t.co/jFX60jM15w

இதைத் தொடர்ந்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படுவது தவிர்த்து ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்.  தடுப்பூசி குறித்து 15 நாட்களுக்கு முன்னரே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனாவுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அதன் தீவிரத்தை உணராமல் இந்த தருணத்தில் தேவையற்ற அற்பமான அரசியல் சரியானது அல்ல என ராகுல் காந்தி புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.