'டெல்டா பிளஸ் தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசிகளுக்கு பெரும்பங்கு'

கரோனா இரண்டாம் அலையிலிருந்து நாடு மெல்ல மீண்டுவரும் நிலையில், நமது கவனம் நாட்டின் பல பகுதிகளில் பரவி வரும் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் மீது மாறியுள்ளது.
'டெல்டா பிளஸ் தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசிகளுக்கு பெரும்பங்கு'
'டெல்டா பிளஸ் தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசிகளுக்கு பெரும்பங்கு'


கரோனா இரண்டாம் அலையிலிருந்து நாடு மெல்ல மீண்டுவரும் நிலையில், நமது கவனம் தற்போது நாட்டின் பல பகுதிகளில் பரவி வரும் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் மீது திரும்பியுள்ளது.

டெல்டா பிளஸ் பற்றிய சந்தேகங்களுடன் தொற்றுநோயியல் துறை மருத்துவர், பொது சுகாதார நிபுணர், 'நாங்கள் வெல்லும் வரை: கரோனா பேரிடருக்கு எதிரான இந்தியாவின் போர்' என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியாவை சந்தித்தோம்.

கரோனா வைரஸ் உருமாறியிருக்கிறது மற்றும் ஆய்வுகளும் நாட்டில் இரண்டாவது கரோனா அலை தீவிரமடைய உருமாறிய டெல்டா வைரஸ் காரணம் என்று தெரிவிக்கிறது. இந்த உருமாறிய வைரஸின் தன்மை மற்றும் இது எவ்வாறு வேறுபடுகிறது?

டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா
டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா

அடிப்படையில், உருமாறிய டெல்டா பிளஸ், டெல்டா வைரஸைப் போன்றே ஒத்திருக்கிறது. உருமாறிய பிளஸ் கூடுதலாக கே417என் என்ற திரிபைக் கொண்டிருக்கிறது.  ஆரம்பத்தில் கிடைத்த முடிவுகளில், மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சையை எதிர்க்கும் ஆற்றலை இந்த திரிபு கொண்டிருந்ததைக் காட்டியது. மற்றபடி, அதன் தன்மை, உருமாறிய டெல்டாவையே ஒத்திருக்கிறது. டெல்டா வைரஸைக் காட்டிலும், டெல்டா பிளஸ் அதிகம் பரவும் திறன் மற்றும் எதிர்ப்பாற்றலை தாண்டிச் செல்லும் திறன் கொண்டதா என ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இது முந்தைய உருமாறியதைப் போன்றே இருப்பதால் கவலையளிப்பதாக உள்ளது. டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகியவை, ஆல்பா வைரஸுடன் ஒப்பிடுகையில் அதிகம் பரவும் தன்மை கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே, நோய் எதிர்ப்பாற்றலை எதிர்க்கும் திறன் அல்லது தன்மையைக் கொண்டிப்பதால் ஏற்கனவே தொற்று பாதித்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படலாம். இரண்டுமே தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதும், இது குறைந்த சதவீத மக்களிடத்தில்தான் காணப்பட்டது, தடுப்பூசியின் திறன் விகிதமோ 80-90 சதவீதமாக உள்ளது.

உருமாறிய வைரஸை எதிர்க்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு உள்ளதா? எதிர்ப்பாற்றல் குறித்து ஆய்வு செய்வதாக ஐசிஎம்ஆர்  கூறியுள்ளதே?

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தற்போது செலுத்தப்படும் தடுப்பூசி, ஆல்பா, பீட்டா, கம்மா மற்றும் உருமாறிய டெல்டா வகை வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல்  கண்டறியப்பட்டுள்ளது. ஒரே ஒரு வேறுபாடு, புதிய உருமாறிய வைரஸ்களை எதிர்க்க தேவைப்படும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியதுதான். ஆனால், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தற்போது பரவும் உருமாறிய வைரஸ்களை எதிர்க்க உதவும். அண்மையில் கோவிஷீல்டு குறித்து வெளியான தகவலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடுதலாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள், உடலில் ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் கோவிஷீல்டு முதல் தவணைக்கும் இரண்டாவது தவணைக்கும் இடையேயான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை மட்டுமே கரோனாவை எதிர்க்கப் போதுமான பாதுகாப்பை அளிக்குமா?

கோவிஷீல்ட் தடுப்பூசி ஆரம்ப பரிசோதனையில் ஒரு தவணையில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான பரிசோதனைகளில், கூடுதலாக ஒரு தவணை செலுத்துவது, ஆன்டிபாடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கண்டறிந்தனர், நிறைவாக, இரண்டு தவணைகளாக செலுத்தும்படி தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பூசியின் 2 தவணைகளுக்கு இடையிலான அவகாசத்தை நீட்டிப்பது, பாதுகாப்பை மேம்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அண்மையில் நடந்த ஆய்வில், ஒரு தவணை தடுப்பூசி லேசான மற்றும் தீவிரமான தொற்றுகளுக்கு எதிராக 70 சதவீத பாதுகாப்பை அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியின் நோக்கம், மருத்துவமனையை சார்ந்திருப்பதைக் குறைப்பதே. தடுப்பூசி செலுத்துவது, தீவிர பாதிப்பைத் தடுப்பது மற்றும்  ஒரு தவணையும் கூட இதில் நல்ல பலனைக் கொடுக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com