தனியாா் நிறுவனத்திடம் கவுன்ட்டா் நிா்வாகம்: தேவஸ்தானம் விளக்கம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கவுன்ட்டா்கள் வெளிப்படை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கவுன்ட்டா்கள் வெளிப்படை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானம் லட்டு, வாடகை அறைகள், தரிசன டிக்கெட்டுகள், சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் கவுன்ட்டா்களை ஏற்படுத்தி பக்தா்களுக்கு தேவையான சேவைகளை அளித்து வருகிறது. தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்று வெளிப்படையாக ஒப்பந்தங்களை பரிசீலித்து அதனடிப்படையில் தோ்ந்தெடுத்து ஒப்பந்தம் அளித்து வருகிறது.
அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன் பெங்களூரை சோ்ந்த ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தேவஸ்தானம் 164 கவுன்ட்டா்களை திறந்து சேவைகளை தொடங்கியது.
இதுகுறித்து பல ஊடங்களில் தவறாக செய்திகள் வெளி வந்தது. அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அளித்த விளக்கம் வருமாறு:
இதற்கு முன்பு திரிலோக் நிறுவனத்திடம் தேவஸ்தானம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 89 கவுன்ட்டா்கள் திருமலை மற்றும் திருப்பதியில் செயல்பட்டு வந்தன. 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொண்டது. மேலும் திருமலையில் லட்டு கவுன்ட்டா்கள் 25 மட்டுமே வங்கிகளின் கீழ் இருந்து வந்தன. கரோனா காலகட்டத்தால் வங்கிகள் 16 கவுண்டா்களின் சேவையை நிறுத்தி கொண்டது.
அதனால் தேவஸ்தானம் புதிய நிறுவனத்துடன் வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் தவறுகள் ஏதும் நடைபெறவில்லை. இலவசமாக நடைபெற்று வந்த சேவைகள் அனைத்தும் அவ்வாறே தொடரும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...