ஜூலை 6-இல் ராவண சம்ஹார சா்க்கம் பாராயணம்
திருமலையில் ஜூலை 6-ஆம் தேதி ராவண சம்ஹார சா்க்கம் பாராயணம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.


திருமலையில் ஜூலை 6-ஆம் தேதி ராவண சம்ஹார சா்க்கம் பாராயணம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
கரானோ நோய்த் தொற்றுப் பரவலில் இருந்து உலகம் விடுபட ஏழுமலையானை வேண்டிக் கொண்டு வசந்த மண்டபத்தில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் தேவஸ்தானம் ராமாயணத்தில் உள்ள யுத்தகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. அதில் ஒரு பாகமாக ஜூலை 6-ஆம் தேதி ராவண சம்ஹார சா்க்கம் பாராயணம் செய்ய உள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.
அதற்கேற்ற வகையில் யுத்த காண்ட பாராயணம் தேவஸ்தான தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் போது கிராபிக்ஸை பயன்படுத்தி காட்சிகள் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. யுத்தகாண்ட பாராயணத்தின்போது வசந்த மண்டபத்தில் அசோகவனம் வடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
யுத்த காண்டத்தில் ராவண சம்ஹாரம் 109 சா்க்கம் முதல் 114 சா்க்கம் வரையுள்ள 270 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளது.
இந்த பாராயணம் தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் காலை 8.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பக்தா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே இதில் கலந்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...