வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேரளத்தில் மேலும் 11,551 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 11,551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :4 ஜூலை 2021, 4:34 pm

DIN

கேரளத்தில் இன்று மேலும் 11,551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,18,047 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 11,551 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரம் 1,541, கோழிக்கோடு 1,358, திரிசூர் 1240 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.73 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 76 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 13,716ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 11,551 பேர் குணமடைந்தனர். 
இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 28,55,460ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,04,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,96,826 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.