நாட்டில் புதிதாக 39,796 பேருக்கு தொற்று; மேலும் 723 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,05,85,229 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,00,430.
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 53-வது நாளாக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் உள்பட இதுவரை 4,02,728 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,82,071 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 35.28 கோடி(35,28,92,046) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...