நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திரிணமூலில் இணைந்தார் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 5) இணைந்தார்.

News image
Updated On :5 ஜூலை 2021, 11:28 am

DIN


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 5) இணைந்தார்.

கடந்த சில நாள்களாக திரிணமூல் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். 

இவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவராகவும் இருந்தார்.
 
சில நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா் ஜிதின் பிரசாத், பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பரான அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். 

இவரது தந்தை பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தின் ஜன்கிபூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.