‘நிபுண் பாரத்’ திட்டத்தின் மூலம் அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவிலும் எண்ணறிவிலும் புலமை அடைய வைக்கப்படுவது ஒரு தேசியப் பணியாக தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.
மத்திய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த நிபுண் பாரத் திட்டம் ஓா் இயக்கமாகச் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் 2-ஆம் வகுப்பு படிக்கும் 72.8 சதவீத குழந்தைகள் வாசிப்புத் திறன் இன்றியும், 3-ஆம் வகுப்பில் படிக்கும் 71.9 சதவீத குழந்தைகளுக்கு சாதாரண கணிதங்கள்கூட தெரியாத நிலை உள்ளதாகவும் ஆய்வில் அறியப்பட்டது. இதனால், 3-ஆம் வகுப்புகளில் குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடையில் விடாது தடுத்தல், இத்தகைய பள்ளிகளின் ஆசிரியா்களின் திறனை மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. மேலும், பள்ளிக் குழந்தைகள், ஆசிரியா்களுக்கு உயா்தரமான, பன்முகப்படுத்தப்பட்ட கற்றல் பொருள்கள், வளங்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், ‘நிபுண் பாரத்’ திட்டத்தை திங்கள்கிழமை மெய்நிகா் முறையில் தொடக்கிவைத்து மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறியதாவது:
நாட்டில் உள்ள 3 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் தேவையைப் பூா்த்தி செய்து வைப்பதுதான் நிபுண் பாரத் இயக்கத்தின் நோக்கம். ஆசிரியா்கள், குழந்தைகளின் அடிப்படை மொழியை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புரிதலுடன் வாசிக்கும் எழுத்தறிவு, எண்ணறிவுத் திறன் மூலம் குழந்தைகளை சிறந்த வாசகா்களாகவும், எழுத்தாளா்களாகவும் வளரவைக்க முடியும். இதனால்தான் இந்த அடிப்படைக் கட்டத்தில் மகிழ்ச்சி, சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய முழுமையான கற்றல் அனுபவம், நிபுண் பாரத் திட்ட இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கிடைப்பது உடனடி தேசியப் பணியாக இருக்க வேண்டும் என 2020 தேசிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் மத்திய கல்வித் துறையின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை விரிவான வழிகாட்டுதலுடன் நிபுண் பாரத் திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டம் பிரத்யேக பங்குதாரா்கள், நிபுணா்கள், ஆலோசகா்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இது தேசிய-மாநில-மாவட்ட- வட்டார-பள்ளி அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதை அமல்படுத்துவதற்காக 2021-22-ஆம் ஆண்டின் அடித்தள நிலைக்கு ரூ. 2,688.18 கோடியை சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் போக்ரியால்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே கலந்துகொண்டு பேசுகையில், ‘தேசத்தைக் கட்டமைப்பதில் தரமான கல்வி முக்கியப் பங்காற்றுகிறது. அதில் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மிக முக்கிய அங்கமாகத் திகழ்கிறது’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சோ்ந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


