மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

111 நாள்களுக்குப் பின்.. நாட்டில் கரோனா பாதிப்பு 34,000 ஆகப் பதிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 111 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான பாதிப்பாகும்.

News image

111 நாள்களுக்குப் பின்.. நாட்டில் கரோனா பாதிப்பு 34,000 ஆகப் பதிவு

Updated On :6 ஜூலை 2021, 4:30 am


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 111 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான பாதிப்பாகும்.

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,06,19,932 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 51,864 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,52,294. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகப் பதிவாகி வருகிறது. குணமடைவோர் விகிதம் தற்போது 97.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,03,281 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,64,357 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 35.75 கோடி (35,75,53,612) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர்: 3,06,19,932
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர்: 2,97,52,294
கரோனாவுக்கு பலியானோர்; 4,03,281
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்: 4,64,357
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 35,75,53,612
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.