மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஸ்டேன் சுவாமி மரணம்: குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.

News image
Updated On :6 ஜூலை 2021, 1:33 pm

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 84 வயது மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி பார்கின்சன் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. தேசிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்த பின்பு தான் அதற்கான உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் அளிக்கப்படவில்லை. மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின்பு தனியார் மருத்துவமனையில் தாமதமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்கா் பரிஷத் விவகாரத்தில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து, பொய் வழக்கு போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸின் சரத் பாவர், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் சார்பாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.