ஜம்மு-காஷ்மீர் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியது தொகுதி மறுவரையறைக் குழு
ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வதற்கான, தேர்தல் ஆணையத்தின் குழு செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியது.


ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வதற்கான, தேர்தல் ஆணையத்தின் குழு செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீநகர் வந்தடைந்தது.
இந்தக் குழுவின் முதல் சந்திப்பு பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கியது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் முஷ்டக் அகமது, சுனிய கௌல் மற்றும் மாவட்டத் தலைவர்கள் மன்சூர் அகமது தோகர் மற்றும் அப்துல் ரஷித் உள்பட அக்கட்சியின் பிரதிநிதிகள் முதல் சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு பிற்பகல் 3.50 மணிக்கு நிறைவடைந்தது. பிற்பகல் 3.50 முதல் 4.10 மணி வரை பாஜக பிரதிநிதிகளைக் குழு சந்தித்தது.
அடுத்த 20 நிமிடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ஜிஎம் மிர்சா உள்ளிட்டோருடன் குழு ஆலோசனை நடத்தியது.
மாலை 4.30 முதல் 4.50 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜம்மு-காஷ்மீர் செயலர் நபி மாலிக் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து குழுவானது ஆலோசனை மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து, ஜிஏ மிர் (தலைவர்) உள்பட 6 காங்கிரஸ் தலைவர்களைக் குழு சந்தித்தது. தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்து அப்துல் ரஹிம், முகமது ஷஃபி உள்ளிட்டோர் மாலை 5.30 வரை குழுவைச் சந்தித்தனர்.
இதுதவிர ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சி உறுப்பினர்களும் இந்தக் குழுவைச் சந்திக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...