ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மேற்கு வங்கத்தில் மேலவை: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று சட்டமேலவை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

மேற்கு வங்க சட்டப்பேரவை

Updated On :6 ஜூலை 2021, 12:42 pm

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று சட்டமேலவை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பங்குபெற்ற 265 உறுப்பினர்களில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 196 உறுப்பினர்களும், எதிராக 69 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன்மூலம், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சட்டமேலவை உருவாக்கப்படும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், அதற்கான தீர்மானத்தை ஆளும் திரிணமூல் அரசு நிறைவேற்றியுள்ளது.

முன்னதாக பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடக ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே சட்டமேலவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.