பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பொறுப்பு ஒதுக்கீடு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துறை பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

News image
எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பொறுப்பு ஒதுக்கீடு
Updated On :7 ஜூலை 2021, 4:59 pm

DIN

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துறை பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி  தர்மேந்திரப் பிரதானுக்கு கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையும், ஜவுளி மற்றும் நுகர்வோர் நலத்துறை  பியூஷ் கோயலுக்கும், பெண்கள் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம் ஸ்மிருதிராணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் மன்சுக் மாண்டவியாவிற்கு சுகாதாரம் மற்றும் உரம், ரசாயனத்துறையும், பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை ஹர்தீப் சிங் புரிக்கும், அஷ்வினி வைஷ்ணவிற்கு ரயில்வே துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவராக இருந்து இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சராகவும் அவர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா கூட்டுறவுத்துறையையும் கூடுதலாக கவனிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.