'செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை' - அமைச்சர் பதில்!
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்துவரும் நிலையில் செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு விரிவான கடிதம் ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.
இந்நிலையில். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கை தேவை என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஹர்ஷ்வர்தன், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...