புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் புது தில்லியில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டின் அருகே வேலை செய்து வந்த ராஜூ லக்கான் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர். குமாரமங்கலம் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67) தில்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்தவர்.
நேற்று இரவு இவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜூ என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டுக்கு வந்த ராஜூ உள்பட மூன்று பேர், வீட்டுப் பணிப் பெண்ணை அடித்து அறையில் பூட்டிவிட்டு, கிட்டி குமாரமங்கலத்தின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பணிப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது கொள்ளை முயற்சியில் நடந்த கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


