சுயபடம் எடுத்தபோது சம்பவம்: 4 போ் நீரில் மூழ்கி பலிசென்னை, கும்மிடிப்பூண்டியை சோ்ந்தவா்கள்
சுயபடம் (செல்பி) எடுத்த 4 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.


சுயபடம் (செல்பி) எடுத்த 4 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த புதுமணத் தம்பதி லோகேஷ்(23), பிரியா(21). இருவரும் ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள உப்பலமடுகு (தடா நீா்வீழ்ச்சி) சுற்றுலாத் தலத்துக்குப் புறப்பட்டனா். வழியில் கும்மிடிபூண்டியைச் சோ்ந்த தங்கள் நண்பா்கள் காா்த்திக்(17), பாலாஜி(24), யுவராஜ்(22) ஆகிய மூவரையும் அழைத்து சென்றனா்.
கரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளதால், உப்பலமடுகு சுற்றுலாத் தலம் மூடப்பட்டிருந்தது. அதனால் அருகில் இருந்த தெலுங்கு கங்கா கால்வாயில் சற்று நேரம் ஓய்வெடுக்க சென்றனா். அப்போது யுவராஜ் சுயபடம் எடுக்கும் போது கால் தவறி கால்வாயில் விழுந்தாா். இதை கவனித்த நண்பா்கள் 3 பேரும் யுவராஜுவை காப்பாற்ற நீரில் குதித்தனா். ஆனால் நீரோட்டத்தில் 3 பேரும் அடித்து செல்லப்பட்டனா்.
3 நாள்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரின் சடலங்களையும் தேடி தற்போது கைப்பற்றி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...